தேடல் தொடங்கியதே..

Thursday 22 November 2012

கீழக்கரை நடுத் தெருவில் நாறிக் கிடக்கும் சாக்கடைகளுக்கு தீர்வு கிடைக்குமா ??

கீழக்கரை நடுத் தெரு பகுதியில் அடிக்கடி சாக்கடை நீர் வழிந்தோடுவதால் பெரும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. சாலைகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படாமல் தேங்கிக் கிடப்பதும், சாலைகளில் கழிவுநீர் ஓடுவதும் சர்வசாதாரணமாக விசயமாக இருந்து வருகிறது.  கீழக்கரை நகரின் இதயப் பகுதியான நடுத் தெரு சுகாதாரக்கேட்டின் பிடியில் பெருமளவில் சிக்கியுள்ளது. வாருகால்களில் சேரும் சாக்கடை கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளில் அள்ளி வைப்பதால், இந்த பகுதியை கடந்து செல்ல பொது துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். 






இதனை கடந்து செல்லும் வாகனங்களின் சக்கரங்கள் மூலம் சாக்கடைகள் தெருவெங்கும் தெரித்துக் கிடக்கிறது. இந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளும், சேவல்களும் தன் பங்கிற்கு, இங்கு கொட்டி வைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகளை கால்களால் கிளறியும் சொண்டுகளால் கொத்தியும் சாலையெங்கும் பரத்தி விடுகிறது. இதனால் கொசு உற்பத்தி அமோகமாக அதிகரித்துக் கொண்டே உள்ளது. தற்போதுள்ள புதுப் புது நோய்களின் வரவால், ஏற்கனவே கதி கலங்கிப் போயிருக்கும் கீழக்கரை பொதுமக்கள், இது போன்ற நகராட்சித் துப்புரவுப் பணியாளர்களின் மெத்தனப் போக்கால் மிகுந்த வருத்தமடைந்து உள்ளனர்.



'கீழக்கரை டைம்ஸ்' யாசீன் அவர்கள் வீட்டின் முன்புறம் 
இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர். A.M.S தமீமுதீன் அவர்கள் கூறும் போது "நடுத்தெரு ஜும்மா பள்ளி அருகாமையில், ஒரு சில இடங்களில்,  பல ஆண்டு காலமாக வாருகால் சரி செய்யப்படாமலும், மூடிகள் போடாததாலும்,இங்குள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி இச்சாலையில் எந்நேரமும் (பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில்) வழிந்தோடுகிறது. இதனால் கிளம்பும் கடும் துர்நாற்றம் வீசுவதால், தொழுகைக்கு செல்பவர்களுக்கும், இப்பகுதியை கடக்கும் பாதசாரிகளையும் மூக்கைப் பிடித்து கொண்டு வேக நடை போடும் நிலையே உள்ளது. தொற்று நோய்பரவும் அபாயமும் நிலவி வருகிறது. ஆகவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்தார்.

Face Book Comments :

    • Keelakarai Anjal ஊரே எங்கும் டெங்கு, மலேரியா, காலரா என வியாதிகளின் பட்டியலில் பயந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

      கொலைக்கார இஸ்ரேல் தாக்குதலுக்கு விடிவு கிடைத்து இருக்கிறது.......

      நகரின் சுகாதார கேட்டிற்கு எப்போது விடிவு வரும்......... தெரியவில்லை..........!!??


      -கீழை ஜமீல் முஹம்மது.
      6 hours ago · Edited · Like · 1
    • Abu Faizel எப்போது தீரும் இந்த கோலம்
      5 hours ago · Like · 2
    • Imam Seyed Theervu ungalidame Undu......(Makkalidam)...verungum illai.....'Suththam Soru Podum'....!!!
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்தப் பகுதியின் கவுன்சிலர் (12 வது வார்டு) நண்பர் சித்தீக் அலி என்ன செய்து கொண்டு இருக்கிறார் ? இது போன்று தெருக்களில் அள்ளிக் குவிக்கப்படும் சாக்கடை நாற்றங்களை கடந்து தானே அவரும் செல்கிறார். இதற்கு தீர்வு காண அவர் முயற்சிக்க வேண்டும். வாருகால்களில் சேரும் கழிவுகளை உடனுக்குடன் துப்புரவு செய்ய நகராட்சிக்கு முறைப்படி சொல்ல வேண்டும். இன்னும் மூடியிடப்படாத வாருகால்களுக்கு, உடனடியாக மூடி போட, வரும் நகர் மன்ற கூட்டத்திலாவது தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
      2 hours ago · Edited · Like · 3
    • கீழக்கரை அந்நியன் kavunsalar sir vaankurathey vaankittaa apram yenke poi pesarathu??????? thirunthunkadaaaaa illeiynaa naan thiruththa veandi varum paravaa illayaaaaaaaaaaa??????????/
    • Nazir Sultan தீர்வில்லா கணக்கு இது 
      தீருமோ பிணி ஊருக்கு 
      வாறுகால் வார்த்தெடுத்து 
      வாசலிலே போட்டு வைத்தால் 
      தேறுமோ எங்கள் உடல் 


      தேகமெங்கும் கொசுக்கடியால் 
      டெங்குடன் மலேரியா 
      சில்லறைக்கு சிக்கன் குனியா 
      கல்லறை வரை விடாது 
      காலை சுற்றுமோ ?
    • Keelai Ilayyavan காக்கா, நெற்றி பொட்டில் அடித்தார் போல், தங்களின் கவிதை வரிகள் உண்மையை உரக்கச் சொல்கிறது. நன்றி
      4 minutes ago · Like


      • Mohamed Quraishi sorry kilakaraye naarudhu nadutheru mattumaa
      • Mohamed Nageem Marika இந்த மாதிரி நாரிகிடக்கும் செயல்களைப் பார்த்தால் ஒன்றுக்கும் உதவாத ஆனையர்கள் நமது நகராட்சிக்கு கிடைத்து விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது!!!! சேர்மன் அவர்கள் ஊர்ப் பனியில் கவனம் செலுத்துவது இல்லையோ என்ற என்னமும் தோன்றுகிறது!!!! நன்றி சாலிஹ், நீங்களாவது ஊரின் மீது அக்கரை கொண்டதற்கு.

No comments:

Post a Comment