தேடல் தொடங்கியதே..

Saturday 7 April 2012

கீழக்கரை பெண்களிடம் தகராறு செய்த பஸ் கண்டக்டர் கைது !

கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்த கருத்த மரைக்காயர் அவர்களின் மனைவி மரியம் பீவி (வயது (55) அவர்களது மகள் துல்பிகாவுடன் கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம் மருத்துவமனைக்கு செல்வதற்காக அரசு பேருந்து 1B யில் பயணித்தனர். அப்போது இவர்களை சம்பந்தம் இல்லாமல் ஆபாசமாக திட்டி தகராறு செய்த பஸ் கண்டக்டர்  மீது இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் கார்மேகம் ஆகியோர்களின் துரித நடவடிக்கையால் பஸ் க‌ண்ட‌க்டர் ஜெயகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.




இது குறித்து மரியம் பீவி அவர்களிடம் கேட்ட போது " பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிக்கெட் எடுக்க கொஞ்சம் தாமதமாகி விட்டது. க‌ண்ட‌க்டர் ஜெயகாந்தனிடம்(37) டிக்கெட் கேட்ட‌போது சில்லரை இல்லை என எரிச்சலடைந்து வாய்க்கு வ‌ந்த‌ப‌டி மிக மோசமாக ஆபாசமான வார்த்தைகளில் பேசினார் .உட‌ன‌டியாக‌ எங்கள் குடும்பாத்தாரிட‌ம் மொபைல் மூல‌ம் த‌க‌வ‌ல் கொடுத்தோம்.

அப்போது கண்டக்டர் ஜெயகாந்தன் "எங்கே வேண்டுமானலும் புகார் செய்து கொள்"' என்று திமிராக, உறவுமுறைகளை கொச்சைப் படுத்தி பதில் சொன்னார். பின்னர் அதே பஸ்ஸில் திரும்ப பயணித்து ஆபாச‌மாக‌ பேசிய‌ க‌ண்ட‌க்ட‌ர் ஜெய‌காந்த‌னை போலீஸ் நிலைய‌த்தில் ஒப்படைத்தோம். நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்று நமதூரை சார்ந்த எந்த ஒரு பெண்மணிக்கும் இனி நடக்கக் கூடாது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் 
நம் கீழக்கரை மக்கள், அனைத்து பிரச்சனைகளையும், சட்டத்தின் வழி நின்று எதிர் கொள்ள முனைந்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி சட்டம் தன் கடமையை செய்யட்டும்....

Friday 6 April 2012

கீழக்கரையில் இலவச 'ஆஸ்துமா விழிப்புணர்வு' முகாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி !

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்குத் தெரு கிளையும், கீழக்கரை ஆயிஷா கிளினிக்கும்  இணைந்து நடத்தும் இலவச ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை (08.04.2012) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆயிஷா கிளினிக்கில் (தெற்குத் தெரு இஸ்லாமியா பள்ளிக்கூடம் எதிரில்) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இது குறித்து கீழக்கரை TNTJ நிர்வாகி ஹாஜா அவர்கள் கூறும் போது  "இந்த முகாமில் சுவாசப் பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் குறிப்பாக சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வாய் வழியாக மூச்சி விடுபவர்கள், தூசி மற்றும் புகை சம்பந்தப்பட்ட பணியில் வேலை செய்பவர்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் மூச்சி விடுவதில் சிரமப்படுபவர்கள், நீண்ட நாள் சளி மற்றும் இருமலுடன் கஷ்டப்படுபவர்கள், மூச்சி விடும் போது 'விசில் சத்தம்' கேட்பவர்கள் கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகளை பெறலாம்.


TNTJ வெளியிட்டுள்ள நோட்டீஸ்

டாக்டர். நசிரா பர்வீன், டாக்டர். ஆயிஷா பர்வீன் ஆகியோர்கள் சிகிச்சை அளிக்க இருக்கிறார்கள். மேலும் இந்த முகாமில் நுரையீரல் செயல் திறன் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் முழுவதும் இலவசமாக செய்யப்படுகிறது. சுவாச பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஆஸ்துமா பற்றிய ஆலோசனைகளை, விழிப்புணர்வுகளை இந்த முகாமில் பெறலாம்" என்று தெரிவித்தார்.



அறிவிப்புப் பலகை (இடம் :கிழக்குத் தெரு)


இந்த ஆஸ்துமா விழிப்புணர்வு முகாமில், சுவாச பாதிப்புள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Thursday 5 April 2012

கீழக்கரையில் 'தண்ணீர் பந்தலாக மாறிய குப்பை மேடு' - பொது மக்கள் வரவேற்பு !

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையின் பிரதான பகுதியாக இருக்கும் செக்கடி நுழைவு பகுதி ( வடக்குத் தெரு பள்ளிவாசல் முன் புறம்) என்று நோக்கினும் 'துர் நாற்றம்' வீசும் குப்பை மேடாகவே காட்சி அளித்து வந்தது. இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், அந்தப் பகுதியில் தொழில் புரியும் வியாபாரிகளும், இந்த அவலத்தால்  பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.


தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல்

ஆனால் தற்போது இந்த இடம், தமிழக முதல்வரின் ஆணையின் பொருட்டும், நல்லுள்ளம் படைத்தவர்களின் முயற்சியாலும், கொளுத்தும் வெயிலின் தாக்கத்தின், தாகத்தை தீர்க்கும், தண்ணீர் பந்தலாய் மாறி இருக்கிறது. இதனால் சுற்று வட்டார பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


குப்பை மேடாக காட்சி அளித்த இடம்



இது குறித்து அதே பகுதியில் கடை வைத்திருக்கும் சேட் அவர்கள் கூறும் போது "இந்த நல்ல முயற்சி அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. 'இங்கு குப்பை கொட்டாதீர்கள்' என்று பல முறை எடுத்து கூறியும்.. பொதுமக்கள் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. இந்த முயற்சிக்கு பிறகாவது இனி குப்பை கொட்ட மாட்டார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

Monday 2 April 2012

கீழக்கரையில் வபாத்து அறிவிப்பு

கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்த மர்ஹூம். அப்துல் ஸலாம், மர்ஹூம். ரசீனா பீவி ஆகியோர்களின் இரண்டாவது மகளும், அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனையியும், அப்துல் கபூர், ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), மர்ஹூம்.ஹசன் பைசல், அப்துல் காதர் (ஜெ.பீ ), குதுபுதீன் ஆகியோர்களின் சகோதரியும் ஸமீமுதீன், ஹிஸாம், நுஸ்ரத், ஃபஸல்,  ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜியானி. 'ஜனாபா.தாஜில் பௌசியா' அவர்கள் நேற்று (01.04.2012)  சென்னையில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).



அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று  (02.03.2012) சென்னை ராயப்பேட்டை  பள்ளி மைய வாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு 

ஸமீமுதீன்9442126730
  
ஹிஸாம்  - 9952060717

Sunday 1 April 2012

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு !


A.K.S செய்யது இபுறாகீம் சாகிபு அவர்களின் மகனும், A.K.S வருசை முஹம்மது, மர்ஹூம். A.K.S பாரூக், A.K.S கவ்துள் ஹமீது,  A.K.S அமானுல்லாகான், A.K.S ஹபீபு முஹம்மது சுல்தான் ஆகியோர்களின் சகோதரரும், A.K.S முஹம்மது அஸ்ரப் கான், A.K.S சமீம் முபாரக் ஆகியோர்களின் தகப்பனாரும் ஆகிய 'A.K.S. லியாக்கத் அலிகான்' அவர்கள் இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). 


'கீழக்கரை வெல்பேர் தொண்டு நிறுவன'த்தின் நிர்வாகியாக, ஏ.கே.எஸ் லியாகத் அலி அவர்கள் பல்லாண்டு காலம் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.