தேடல் தொடங்கியதே..

Tuesday 21 May 2013

கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் முயற்சியால் ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் துவங்கியது - மகிழ்ச்சியுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் !


கீழக்கரை நகரில் கடந்த ஐந்து மாத காலமாக ரேஷன் கடைகளில் பச்சரிசி விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். ஒவ்வொரு முறையும், பெண்களும் முதியவர்களும் பச்சரிசி வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு சென்று, வெறும் கையுடனே திரும்பி வந்தனர். இதனால் இடியாப்பம், ஆப்பம் விற்பனை செய்யும் ஏழைக் குடும்பங்களும், இடியாப்ப பிரியர்களும் மன வருத்தத்திற்கு உள்ளாயினர்.


இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது. அந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கீழக்கரை பகுதியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நேற்று முதல் பச்சரிசி விநியோகம் துவங்கப்பட்டது. இதனால் அடித்தட்டு பொது மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரை ரேசன் கடைகளில் ஐந்து மாதங்களாக பச்சரிசி போடாததால் பொதுமக்கள் அதிருப்தி - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கலெக்டருக்கு கடிதம் !

கீழக்கரை நகரில் உள்ள, பச்சரிசி பெற தகுதி பெற்று இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ பச்சரிசி வீதம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் குடும்ப அட்டை தாரர்களுக்கு "பச்சரிசி இல்லை... காலியாகி விட்டது... பச்சரிசி தீர்ந்து விட்டது..." என்று ரேஷன் கடை நிர்வாகிகளோ அல்லது அதன் ஊழியர்களோ தெரிவித்தால் உடனடியாக கீழ்காணும் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினரின் அலைப் பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

9677208987 / 9443358305 / 9791742074

  • Keelai Ilayyavan கீழக்கரை நகரில் உள்ள, பச்சரிசி பெற தகுதி பெற்று இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 கிலோ பச்சரிசி வீதம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏதேனும் குடும்ப அட்டை தாரர்களுக்கு "பச்சரிசி இல்லை... காலியாகி விட்டது... பச்சரிசி தீர்ந்து விட்டது..." என்று ரேஷன் கடை நிர்வாகிகளோ அல்லது அதன் ஊழியர்களோ தெரிவித்தால் உடனடியாக கீழ்காணும் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினரின் அலைப் பேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    9677208987 / 9443358305 / 9791742074
    6 hours ago · Like · 5
  • Thameem Mohideen Very good
    6 hours ago via mobile · Like · 3

2 comments:

  1. ஆச்சரியம் ஆனால் உண்மை.கீழையில் பச்சரிசி வினியோகம்.

    இது சம்பந்தமாக கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினரின் தீவிர முயற்சிக்கு வெகு விரைவில் பலனை அருள் பாலித்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

    பச்சரிசியை நம்பி பிழைப்பு நடத்திய ஏழைகளின் வாழ்வில் ஒளி வீச வைத்த இந்த நிகழ்வு எல்லா மாதமும் தொடர வல்ல ரஹ்மானை பிரார்த்திப்போமாக. ஆமீன்

    ReplyDelete