தேடல் தொடங்கியதே..

Saturday 22 June 2013

10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் !

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப் புத்தகத்தில், 100 ஆம் பக்கத்தில் "இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு" என்கிற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. அந்த பாடத்தின் தொடர்ச்சியில் 105 ஆம் பக்கத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராஜர் குறித்து வரும் தகவலில், காமராஜர் விருதுநகர் அருகில் உள்ள விருதுப்பட்டி கிராமத்தில் பிறந்ததாக, வரலாற்றுப் பிழையுடன் அச்சிடப்பட்டுள்ளது.


இதனை கீழக்கரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், இதனை அச்சிட்ட சம்பந்தப்பட்ட துறையினருக்கு, அதனை அடுத்த பதிப்பில் உரிய திருத்தம் செய்து வெளியிடவும், தற்போது மாணவர்களுக்கு வரலாற்றுப் பிழையுடன் கற்பித்து வரும் பள்ளிகளுக்கு திருத்தம் குறித்த சுற்றறிக்கை அனுப்பவும் கோரிக்கை விடுக்கிறார்.

இது குறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா. மூனா. சுல்தான் அவர்கள் கூறும் போது " பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுப் பட்டியில்  ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.  பின்னாளில் தான் விருதுப்பட்டியாக இருந்த கிராமப் பகுதி, விருது நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

ஆனால் 10 ஆம் வகுப்பு பாடத்தில் 'விருது நகர் அருகே விருதுப்பட்டி' என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவர்களை குழப்புவதாக உள்ளது. 'விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருது நகரில் பிறந்தார்' என்பது தான் சரியானது. தவறாக இடம் பெற்றுள்ளதை உடனடியாக பாட நூல் கழகம் மாற்ற வேண்டும்" என்று காமராஜரின் வரலாற்று நிகழ்வுகளை சுவைபட சொல்லிக் கொண்டே தெரிவித்தார். 

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாற்றி,  ஏழை, எளியவர்களுக்கும் இலவசக் கல்வி,  எங்கும் கல்விக் கூடங்கள், எல்லோருக்கும் இலவசக் கல்வி, மதிய உணவு, சீருடைகள் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்திய முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜர் அவர்கள் பற்றிய வரலாற்றினை பாடப்புத்தகத்தில் தவறுதலாக குறிக்கப்பட்டு உள்ளதை தாமதிக்காமல் அரசு மாற்ற முன் வர வேண்டும்.

  • Keelai Ilayyavan தகவலை பகிர்ந்தமைக்கு, 'இன்று ஒரு தகவல்' நண்பர்கள் குழுவுக்கு நன்றி. இது போன்று பாட நூல்களிலும், வரலாற்று சுவடுகளிலும் உள்ள பிழைகளை, தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள் மிக மிகக் குறைவே. 

    கீழக்கரையை சேர்ந்த ஆனா. மூனா சுல்தான் அவர்கள், இதற்காக குரல் கொடுத்து முயற்சி மேற்க் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது. வாழ்த்துக்கள் ஆய்வாளரே... தொடரட்டும் உங்கள் பணிகள்.!

    • Asan Hakkim இது மாபெரும் குற்றமாகும். தவறினை கண்டுபிடித்த சுல்தான் மாமா அவகளுக்கு சவுதி தமிழர்கள் ஆகிய எங்களின் வாழ்த்துகள். அன்புள்ள அசன் ஹக்கீம்%%
      19 hours ago · Unlike · 2

1 comment:

  1. Every one should know about the history of leaders. Day by day technology is improving but how the peoples are in illiterate... please guide them in a right way.

    ReplyDelete