தேடல் தொடங்கியதே..

Monday 24 June 2013

கீழக்கரையில் 'அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்' (JVC) நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி - விழாக் கோலம் பூண்ட வடக்குத் தெரு மணல் மேடு பகுதி !

கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் கடந்த இரண்டு நாள்களாக, (சனி மற்றும் ஞாயிறு)  அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப் (JVC) ஏற்பாட்டில் 14 ஆம் ஆண்டின் மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி நடை பெற்றது.  இதனை காண நூற்றுக்கணக்கானோர் வடக்குத் தெரு மணல் மேடு பகுதியில் குவிந்தனர். இதனால் இந்த பகுதியே விழாக் கோலம் பூண்டது. இரவு 7 மணிக்கு துவங்கிய கைப்பந்துப் போட்டி நள்ளிரவு வரை நீண்டது. இருப்பினும் பொதுமக்கள் சுவராஸ்யமாக சென்ற கைப்பந்து போட்டியை ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் கண்டு களித்தனர். 



இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. மிகவும்  விறு விறுப்பாக சென்ற போட்டிகளை பொதுமக்கள், தங்கள் நகங்களை கடித்தவாறு, ஆரவாரம் செய்ததுடன், விளையாட்டு வீரர்களை கை தட்டி உற்சாகம் ஊட்டினர். 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த கைப்பந்து போட்டியில், முதல் பரிசை AVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், இரண்டாம் பரிசினை JVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், மூன்றாம் பரிசினை CVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தட்டிச் சென்றது. 








இந்த விளையாட்டு போட்டியினை அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சேர்மன். ஆபித் அலி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் அஹமது மிர்ஷா, விளையாட்டு ஊக்குவிப்பாளர். திரு. கிருஷ்னமூர்த்தி,

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், ஜமாஅத் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.

FACE BOOK COMMENTS :


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல முயற்சி. வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த காலத்தில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதே காலாவதி ஆகி இருந்த சூழலே நிலவி வருகிறது. கிரிக்கெட்டை மட்டுமே விளையாடும் இளைய தலை முறையினர்களை இது போன்ற அருமையான விளையாட்டுகளின் பக்கம் ஊக்குவிக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.
  • Asan Hakkim மாணவர்களை ஊக்க படுத்தும் நோக்கத்தோடு.., வருடம் தவறாமலும், தடம்புரளாமலும், அழகான முறையில் சிறப்பாக தொடர்ந்து செய்துவரும் மதிப்பிக்குரிய அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சேர்மன். ஆபித் அலி காக்கா அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றிகள் பல..பல.. - சௌதியிலிருந்து கஸ்டம்ஸ் ரோடு அன்புள்ள அசன் ஹக்கீம்%% & ஜனாப் முல்லை சரிப் மவன் வடக்குத்தெரு ஹீரோ அம்ஜத்(ராஜ ராஜசோழன்)

No comments:

Post a Comment