தேடல் தொடங்கியதே..

Saturday 20 July 2013

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

கீழக்கரை நகரம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊராக திகழ்வதால், ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான ஹோட்டல் மற்றும் தேநீர் விடுதிகளில், காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே,  களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது. இதனால் நோன்பாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறுகிறது.

இதனை நோன்பாளிகள் விரும்பி, தங்கள் இல்லங்களுக்கு வாங்கி செல்கின்றனர். இது போன்ற புதிய கடைகளின் வரவால், நோன்பு பிடித்து களைப்புடன் வீடுகளில் இருக்கும், பெண்மணிகளின் வேலைப் பளு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

கீழக்கரை ரமலான் ஸ்பெசல் பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)



கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)


<<<<<  கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

No comments:

Post a Comment