தேடல் தொடங்கியதே..

Friday 2 August 2013

கீழக்கரையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் உயிர் பலி ஆபத்து - உடனடியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரை அஹமது தெரு தைக்கா அருகாமையில் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் பாதசாரிகள் கடும் அச்சத்துடன் உலவி வருகின்றனர். அந்த பகுதியில் செல்லும் மின்சார கம்பிகளை, கைகளை உயர்த்தி  தொடும் அளவிற்கு மிக தாழ்வாக செல்கிறது. இதனை உடனே மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் முஹம்மது அபூபக்கர் சித்தீக் அவர்கள் நம்மிடையே பேசும் போது "இந்த ஆபத்தான மின் கம்பிகள் குறித்து மின்சார வாரியத்தினரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. இதனை நாங்கள் சொந்த செலவில் தான் செய்து கொள்ள வேண்டும் என பதில் தருகின்றனர். 

மின்சார வயர்கள் தாழ்வாக செல்ல முக்கிய காரணம், இந்த பகுதியில் நாளுக்கு நாள் சாய்ந்த வண்ணம் இருக்கும் 'அபாய மின் கம்பம்' தான். இதிலிருந்து தான் மின் சப்ளை இந்த பகுதிக்கு வருகிறது. இந்த கம்பத்தை நிமிர்த்தி நிறுத்தினாலே போதும். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும்" என்று பயம் கலந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.


இது குறித்து மின் துறை அதிகாரி கூறுகையில், "இப்பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம், இப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.

2 comments:

  1. சவுக்கடி சாவன்னா2 August 2013 at 23:09

    இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் முஹம்மது அபூபக்கர் சித்தீக் அவர்கள் நம்மிடையே பேசும் போது "இந்த ஆபத்தான மின் கம்பிகள் குறித்து மின்சார வாரியத்தினரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. இதனை நாங்கள் சொந்த செலவில் தான் செய்து கொள்ள வேண்டும் என பதில் தருகின்றனர்.

    இது குறித்து மின் துறை அதிகாரி கூறுகையில், "இப்பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம், இப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.

    என்ன ஒரு கொடுமையான பதில்

    பொதுவாக அனைத்து அரசு சார்ந்த துறைகளும் கீழக்கரை மக்கள் வடிகட்டின முட்டாள்கள் எனறு முடிவே செய்து விட்டார்கள் போலும்.

    லஞ்ச லாவண்ணியத்தால் புறை ஓடிப் போன மின் துறை தரமற்ற மின் கம்பங்களை நட்டி விட்டு அதை ச்ரி செய்ய பொது மக்களின் ஒத்துழைப்பை நாடப் போகிறார்களாம்.

    மின் வயர்கள் நகரில் பல இடங்களில் மிகத் தாழ்வாக இருப்பதற்கு முக்கிய காரணம் சீர் கெட்ட நிர்வாகத்தை செய்து கொண்டிருக்கும் ஊழல்பெருச்சாலிகளை கொண்ட நகராட்சி நிர்வாகமே.

    லஞ்ச லாவண்ணியம் காரணமாக தரம் இல்லாமல் போட்ட சாலை களையே மீண்டும் மீண்டும் போடும் போது பழைய சாலைகளை அகற்றாமல் அதன் மீதே புதிய சாலைகளை போட்டத்தின் பயனாய் நகரில் பல இடங்களில் மூன்று அடியிலிருந்து ஆறு அடி வரை உயர்ந்து விட்டது. இதை அவர்களால் மறுக்க முடியுமா?

    இன்றும் கீழை இளையவன் போன்ற சமூக ஆர்வலர்கள் யாரேனும் நகரை விரிவாக வலம் வந்தால் இடிக்கப்படாத எத்தனை பழைய கால வீடுகள் சாலைக்கு கீழே அதால பாதாளத்தில் உள்ளது என்பதை தெளிவாக உணர முடியும். மழை காலங்களில் அவர்கள் படும் துயரத்தை இத்ற்கு காரணகர்த்தக்களான இந்த தட்டு கெட்டவர்களால் உணர முடியுமா? கூறு கெட்ட ஜன்மங்கள்.

    புதிய சாலைகள் போடும் போது பாதிப்புக்கு ஆளாகும் மக்கள் துடப்பதை கையில் எடுத்து போராடினால் தான் இது மாதிரி பிரச்சனைகளுக்கு விடிவு காலம் பிறக்கும் போலும்.

    நகர் மக்களே இதற்கு உங்கள் பதில் என்ன?

    அது சரி, இது போன்ற பிரச்சனையை சரி செய்ய கீழக்கரைக்கு மட்டும் சபந்தப்பட்ட துறையால் ரூபாய் ஆறு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சில காலத்திற்கு முன் பத்திரிக்கைகளில் செய்தி வந்ததே அது என்னவாயிற்று?அதியும் ஆட்டையை போட்டு விட்டர்களா?

    ReplyDelete
    Replies
    1. Saalai theruvilum idhai vida kodumaiyAga,
      palligal sellum chinna pillagail kaigal padum alavirku min kammbigal thonngi kondu ullana,
      sammandha patta adhigArigal thagundha nadavadikai yedutthAL makkaluku pAdhukApu kidaikum.
      - Az€€$

      Delete