தேடல் தொடங்கியதே..

Monday 5 August 2013

கீழக்கரை ரோட்டரி கிளப் சார்பாக நடை பெற்ற 'சமய நல்லிணக்க' இஃப்தார் விருந்து நிகழ்ச்சி - இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 16)

கீழக்கரை நகரில் இதுவரை நடைபெறாத வகையில் இந்து, முஸ்லீம், கிறித்துவ சமூகத்தினர் பங்கேற்ற நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி, கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக, நேற்று மாலை 6.30 மணியளவில் கண்ணாடி வாப்பா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, இராமநாதபுரம் தாயுமான சுவாமி தபோவனம் அங்கத்தினர் பிரம்மாச்சாரி ராம்குமார், கீழக்கரை C.S.I.சர்ச் பாதிரியார் தேவதாஸ் ராஜன் பாபு, வடக்குத் தெரு மஸ்ஜிதுல் மன்பயீ கதீப். மௌலவி.சாகுல் ஹமீது தாவூதி ஆகியோர்கள் கலந்து கொண்டு 'சமய நல்லிணக்கம் - ஒற்றுமை' குறித்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதியில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடை பெற்றது.

 

இந்த நிகழ்வில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர். ஆசாத் ஹமீத், ரோட்டரியன் நூர் ஆப்டிகல்ஸ் ஹசன், மாவட்ட நிர்வாகி, டாக்டர்.சின்னத்துரை அப்துல்லாஹ், துணை ஆளுநர்.ரோட்டரியன். முருகேசன், ரோட்டரியன். சதக்கத்துல்லாஹ் உள்ளிட்ட ரோட்டரி சங்க நிர்வாகிகளும், முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர். அலாவுதீன், சீதக்காதி அறக்கட்டளை நிர்வாகி உமர் ஆகியோர்களும்,

சமய நல்லிணக்க ஆர்வலர்கள், வர்த்தக பெருமக்கள், நகர் முக்கியஸ்தர்கள், இஸ்லாமிய அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாற்று சமய முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.செய்யது ராசிக்தீன் மற்றும் செயலாளர். சுப்ரமணியன் சிறப்பாக செய்து இருந்தனர்.

படங்கள் உதவி : சங்கர் ஸ்டூடியோ 

FACE BOOK COMMENTS : 

  • Sheak Meeran அருமை
  • கீழை ரோஜா நல்ல நிகழ்ச்சி. இது போன்ற மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சிகளை, எல்லா ஊர்களிலும் உள்ள பொது அமைப்புகள் நடத்த வேண்டும்.
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இன்றைய உலகில் சமூகங்களுக்கிடையில், மதங்களுக்கு மத்தியில் ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் குறைந்து வேற்றுமையும், சண்டை சச்சரவுகளும் மேலோங்குவதை காணுகிறோம். எல்லா மதங்களுமே நல்ல பண்புகளையும், வேற்றுமையில் ஒற்றுமையையும், அமைதியான முறையில் வாழும் சூழ் நிலையையுமே போதிக்கிறது.

    ஆனால் மதத்தின் பெயரில் அமைதியின்மையையும், குழப்பங்களையும் மத வெறியர்கள் உருவாக்குகிறார்கள். இந்நிலையில் மத நல்லிணக்கம் மூலமே மனிதகுல ஒற்றுமை சாத்தியம் என்ற அடிப்படையில், இது போன்ற இப்தார் நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கது

    மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப் பற்றி அல்குர்ஆணின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் ஏராளம் இருக்கிறது.

    எனவே தான்.. இது போன்ற சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளை அதிகமதிகம் நடாத்தி, சமய வேறுபாடின்றி சகோதரர்களாக வாழும் நம்மை துண்டாட நினைக்கும் கயவர்கள் கூட்டத்தின் முகத்தில் கரியை பூச வேண்டும். இந்த நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கான கூலியை, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வல்ல நாயன் அல்லாஹ் எவ்வித குறைவுமின்றி தந்தருள்வானாக.. ஆமீன் அமீன் யாரப்பில் ஆலமீன்..
  • Keelakarai Ali Batcha கீழக்கரை சரித்திர சுவடியில் பதிய வேண்டிய சிறப்பு மிக்க நிகழ்ச்சி
  • சின்னக்கடை நண்பர்கள் Good news to all. This kind of programes are often conducing in each and every cities and towns all over India. it will help to build humanity, brotherhood

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சா5 August 2013 at 21:50

    கீழக்கரை வரலாற்று சுவடியில் பதிய வேண்டிய சிறப்பு மிக்க நிகழ்ச்சி

    ReplyDelete