தேடல் தொடங்கியதே..

Friday 20 September 2013

கீழக்கரையில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் பள்ளி சிறுவர்கள் - விபத்து ஏற்படும் முன் பெற்றோர்கள் கண்டிக்க வேண்டுகோள் !

கீழக்கரையில் லைசென்ஸ் இல்லாமல், பள்ளி சிறுவர்கள் பைக், ஆட்டோ, ஆம்னி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. கீழக்கரை நகரில் பள்ளி மாணவர்கள் லைசன்ஸ் பெறாமல் டூவீலர்களை ஓட்டி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'ஒரே பைக்கில்  மூன்று பேர் முதல்  ஆறு வரை' செல்கின்றனர். இதனால் நடை பாதைகளில் செல்வோர், உயிர் பயத்தில் உறைந்து வருகின்றனர்.

படம் : ஆனா. மூனா. சுல்த்தான் அவர்கள்

இது போன்று விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டும் பிள்ளைகளை  பெற்றோரும் கட்டுப்படுத்துவதில்லை. முறையாக ஓட்டுனர் பள்ளிகள் மூலம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின் ஓட்டி பழகினால் விபத்துகளையாவது தவிர்க்கலாம். அவ்வாறு இல்லாமல், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்களே விலையுர்ந்த  'மார்டன் ரேஸ் பைக்குளை' வாங்கி கொடுக்கின்றனர்.



படம் : A.S.டிரேடர்ஸ் கபார் கான் அவர்கள் 

கீழக்கரை நகருக்குள் பள்ளி மாணவர்கள் பைக்குகளில் பறப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. வண்டி உயரம் கூட இல்லாத சிறுவர்கள், எந்தப் பயமும் இல்லாமல் மின்னல் வேகத்தில் ஓட்டுவதைப் பார்க்கும் போது, ஒரு கணம் நெஞ்சம் பதை பதைக்கிறது. பிற மாநிலங்களில் இருப்பது போல் உரிய வயது மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி வரும் மாணவர்களைப் பிடித்தால், அவர்களின் பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும் சட்டத்தை இங்கும் கொண்டு வர வேண்டும்.

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணை செயலாளர் M.I.செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "18 வயது வரை லைசென்ஸ் பெற முடியாது என்ற நிலையில், குழந்தைகளை வண்டி ஓட்ட அனுமதிப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

இதன் மூலம், விபத்துகளுக்குப் பெற்றோரே அச்சாரம் போடுகின்றனர். மோட்டார் வாகன விதிப்படி, வாகனத்துக்கு சொந்தக் காரர் தவிர மற்றவர்கள் அதை ஓட்டிப் பிடிபட்டால், வாகனத்தின் சொந்தக்காரரைத் தண்டிக்கலாம்.

உரிய வயதும் பக்குவமும் வரும் வரை குழந்தைகளை வண்டி ஓட்டக் கண்டிப்பாகப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது." என்று மிகுந்த கண்டிப்புடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment