தேடல் தொடங்கியதே..

Sunday 20 October 2013

கீழக்கரையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் 'அபாய மரங்கள்' - விரைந்து வெட்டாமல் மெத்தனம் காட்டும் நகராட்சி நிர்வாகம் !

கீழக்கரை நகரில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் பல பகுதிகளில், எந்நேரமும் முறிந்து விழும் நிலையில் பட்டுப் போன மரங்கள் நிற்கின்றன. தற்போது கீழக்கரை நகரில் மழை பெய்யத் துவங்கியுள்ளதால், இந்த மரங்கள் விழுந்து விடும் அபாயம் இரு மடங்காகியுள்ளது. மேலும் இந்த மரங்களில் இருந்து செல்லும் பட்டுப் போன கிளைகள் மின் கம்பங்களை ஒட்டியவாறு செல்வதால் இது நிச்சயம் பேராபத்துக்களை விளைவிக்கும் என்பதால் விரைந்து இதனை வெட்ட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்கள் பலர் மனுக்கள் மூலம் வேண்டுகோள்  விடுத்தும் பயனொன்றும் இல்லை. 


இது குறித்து நாம் ஏற்கனவே கடந்த வருடம் "கீழக்கரையில் விழ இருக்கும் மரங்களால் எழ இருக்கும் ஆபத்துக்கள் - விரைந்து வெட்டக் கோரி நூதன முறையில் கண்டனம் !" என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.


மேலும் "கீழக்கரை '9 பங்களா' அருகாமையில் ஆபத்தை எதிர் நோக்கி இருக்கும் 'அபாய மரம்' - விரைந்து வெட்ட வேண்டுகோள் !" என்கிற தலைப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.


செய்தி வெளியிட்ட பிறகு, நகராட்சி ஆணையரிடம் முறைப்படி முறையிடும் போதெல்லாம், மரங்களை வெட்ட டெண்டர் கொடுத்தாகி விட்டது. இன்னும் சில தினங்களில்... இந்த வாரம்... அடுத்த வாரம்... என நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. ஒரு உயிரிழப்புக்குப் பின்னர் தான் நடவடிக்கை மேற்கொள்வார்களா ? என்பது தெரியவில்லை.



இந்நிலையில் நகர் மத்தியில் மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியான முஸ்லீம் பஜாரில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட வேப்ப மரம் பட்டுபோய் பல ஆண்டுகள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்களால் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வேறு வழியின்றி, நகராட்சியினருக்கு அபாயத்தை விளங்க வைக்கும் முகமாக அபாய அறிவிப்பு பலகை ஒன்று, இந்த மரத்தில் தொங்கவிடப்பட்டு, அதுவும் காலாவதியாகப் போகிறது.

இனியாவது கண்டு கொள்வார்களா..?  மனித உயிரின் மகத்துவம் விளங்கி..!

No comments:

Post a Comment