தேடல் தொடங்கியதே..

Saturday 20 July 2013

கீழக்கரை நகராட்சியின் சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் - தமுமுக நிர்வாக கூட்டத்தில் முடிவு !

கீழக்கரை நகர் தமுமுக நிர்வாக கூட்டம் 19. 07. 2013 அன்று  நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜுதீன் தலைமையில் நகர் துணைத் தலைவர் கோஸ் முகம்மது முன்னிலையில் நகர் நிர்வாக கூட்டம் நடைபெற்று, இறுதியாக பின் வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 



1. கீழக்கரை நகராட்சியில் தொடர்ந்து நடைபெறும் சீர்கேடுகளை கண்டித்தும், முறையான குடிநீர் வழங்க கோரியும் வரும் 2 6. 07. 13 அன்று வெள்ளிக் கிழமை முஸ்லீம் பஜாரில் பகல் 2 மணிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்

2. ஜுலை 15 க்குள் அனைத்து மக்கள் நல பணிகளும் நிறைவேற்றப்படும் என்று கீழக்கரை நகராட்சி அதிகாரிகள், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

3. புனித ரமலான் மாத பித்ராக்களை வசூல் செய்து அதிகமான ஏழை எளிய மக்களுக்கு பெருநாள் கொடை வழங்குவது. 

இந்த நிகழ்வின் போது, கீழக்கரை தமுமுக மூத்த தலைவர் அன்பின் அசன், நகர் செயலாளர் பவுசுல் அமீன், ஒன்றிய செயலாளர் சாதிக், மமக செயலாளர் இக்பால், வர்த்தக அணி செயலாளர் சலீம், மமக துணை செயலாளர் புகாரி PRO கமால் நாசர் மற்றும் ரிபாக், , வளைகுடா நிர்வாகி கீழை. இர்பான், 9 வார்டு நிர்வாகி மாலிக் உடன் இருந்தனர்.

தகவல் : நண்பன். கீழை இர்பான் 


FACE BOOK COMMENTS :
  • Mohamed Irfan நமது ஊருக்கு வரும் நிதியை சிரலிக்கும் நிர்வாகத்தை இன்னும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தால் அல்லாவிடம் நாமும் பதில் சொல்ல வேண்டும். நமது வீட்டில் வரும் நோய்களுக்கு முடிவுகட்டுவோம்.... கீழக்கரை குடிநீர் பிரச்சனையை ஒழித்திடுவோம்.... முன்மாதிரி நகராட்சியாக மாற்றவிடுவோம்..... தயாரகுங்கள் உங்களுக்கு நடக்கும் அநீதிகளை தடுக்க..... அணிதிரல்வீர் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி..... அநீதியை அழிக்க மக்கள் வெள்ளம் திரளட்டும்..... 26 07 ஆர்பாட்டம் கீழக்கரை வலாற்றில் பொறிக்கபடும்... அமைதிக்கு பிறகு தான் புயல் என்பார்கள் ஆனால் இன்று நமது ஊர் மக்கள் சுனாமியாக புறப்பாட தயாரகுகிறார்கள்... மக்கள் எழுச்சியில் தான் மாபெரும் மறுமலர்ச்சி நடைபெறும்.. அந்த நாள் தான் 26 07 முஸ்லீம் பஜார் நோக்கி மக்கள் எழுச்சி.....
    July 20 at 11:31am · Like · 4

  • Fouz Ameen சுடர் விட்டு எறியும் நெருபை பார்த்து நண்பருடைய வயிறு எரிகிறது என்று நினைக்கிறேன்... சுடர் விட்டு எரியும் நெருப்பு அணைவதற்கு அல்ல நண்பரே நமது ஊருக்கும் இயக்கத்திற்கும் ஒளி தருவதற்கு என்பதை நீங்கள் இன்னும் சில காலத்தில் அறிவீர்...
  • Jahufar Sadiq இனி அடுத்து வர இருக்கும் நிர்வாகம் அல்லாஹுவுக்கும் மறுமைக்கும் பயந்து நாங்களோ எங்கள் குடும்பமோ எங்கள் வாரிசோ அமானிதத்தை உண்ணமாட்டோம், உண்ண நினைக்கவும் மாட்டோம் ரசூல் (ஸல்) காட்டித்தந்தபடி அமானிதம் அது எங்களுக்கு ஹராம் என்று வல்ல அல்லாஹுவின் மீது சத்தியமிட்டு நடக்க நினைப்பவர்கள் பொறுபேற்க வருவார்களா? இல்லே நாமும் நம்ம ஈவுக்கு போட்டுத்தாக்குவோமே என்கிற எண்ணத்தோட வருவாங்களா?

    தற்போதைய நிர்வாகம் தான் மட்டும் தன்னோட பையை நிரப்பிக் கொள்றாங்க, சக கவுன்சிலர்களையும் கூப்பாடு போடும் சில அரசியல் சார்ந்த கட்சிகளையும் கண்டு கொள்வதில்லை அதாவது அடிக்கிறதுல பங்கு பிரிக்கிறது இல்லே அதனாலதான் இப்படி கொடிபிடிக்கிராங்கெ..... கொஞ்சத்த எலும்புத் துண்டு மாதிரி தூக்கிப்போட்டா நக்கிக்கிட்டு சும்மா கெடப்பாங்கென்னு சொல்றாங்களே அதப்பத்தி....... வாசகர்களின் அதோடு அவங்க சொல்றமாதிரி கூட்டத்தாரின் கருத்து ......?

    எது எப்படியோ முந்தைய காலங்களில் இப்படிப் பட்ட பதவி நாற்காலிகளில் தரமானவர்கள் அமர்ந்தார்கள். அந்த காலகட்டங்களில் இப்படிக் கேவலத்தனமா யாரும் நடந்துகிட்டாங்கன்னு செய்திகள் கேள்விப்படலே.
  • King Haji ஜகுபர் சாதிக் அவர்களே நீங்க 18 வார்டு கவுசிலர் ஐந்து நபர்களிடம் வரி கைட்டி தருகின்றன் என்று மோசடி செய்ததை நடு ரோட்டில் வைத்து 20 வார்டு கவுசிலர் கேட்டதுக்கு வாயை பொத்தி கொண்டு போனார் நீங்க அந்த ஆளுக்கு உத்தமன் என்று சட்பிகட் கொடுத்த ஆளுதானா நீங்க இப்போழுது துணை செர்மன்னிடம் லஞ்சம் வாங்கிகொண்டு அவர் செய்த தில்லு முல்லு துணை போகிறார் நீங்க உண்மையான ஆளா இருந்த எல்லாத்தையும் நீங்க விமர்சிகனும்.
    ஊரில் உள்ள எல்லாருக்கும் கொழப்பம் பண்ணுறவங்க யாருண்டு தெரியும் 500 வாய்கால் மூடி போடுறதுக்கு 350 மூடி போட்டர் துணை சேர்மன் அதற்கு மண் அள்ளி போடதிலும் ஊழலுக்கு துணை போன்னவர்த்தன் உங்க தலைவர் 18வார்டு கவுன்சிலர்

  • Asan Hakkim அஸ்ஸலாமு அழைக்கும் கிங் ஹாஜி காக்கா நீங்கள் கேட்கிற கேள்வியிலே பேஸ்புக் தளமே சும்ம அதிர்ருதுல.
  • King Haji இதுக்கு மூண்ணாடி நிர்வாகத்தில் நம்மா ஊர் என்மோ சிங்கப்பூர் மாதிரி இருந்தது ஏன ஓவர் பில்டப் விட கூடாது ஜகுபர் சாதிக்கு @ நாங்களும் கீழக்கரை தான் ஒரு பொறுமைக்கும் எல்லை உண்டு சும்மா facebook இருக்கு என்று எதையும் எழுதகூடாது முதலில் நம்மா சுத்தமான ஆல பார்க்கணும் நான் என்ன நீனைகிறேன் நீங்க என சரியான ஆல இருந்தா 18 வார்டு இப்போ வண்டி வச்சு இருகார் எப்படி வந்தது என்ன கேளுங்க இது வாரை துணை செர்மன்னை பத்தி குறை சொல்லதுக்கு தான் இந்த வண்டி அதுக்கு இந்த கொடுத்தது ஒரு 50000கொடுத்து வந்தர்தான்.

    துணை சேர்மன் காசு போட்டவன் காசு எடுக்க தான் பார்பான் அதற்கு சேர்மன் உடன்படவில்லை என்றால் சேர்மன் லஞ்சம் வாங்குவர் என பொஸ்ட் அடிப்பது எல்லாம் நடக்கும் ஏற்கனவே 20 வார்டுகவுன்சிலர் இடி மின்னல் ஹாஅடிகாதற்கு ஜா துணைசெர்மனுடன் இருந்தார் இந்த குருப்பு பண்ணுகிற தில்லு முல்லு கண்டு விலகி போய்விட்டார் 9வார்டுக்கு துணை சேர்மன் ரோடு போட்டார் அது தரமில்லை என வார்டு மக்கள் சொல்லுது அதை கேட்டர நோட்டீஸ் புகழ் 18வார்டு அதைமுல நோட்டீஸ் அடிக்கணும் அடிகாதாற்கு எல்லாம் பணம்தான் மக்களே நீங்க சிந்திங்க

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

கீழக்கரை நகரம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊராக திகழ்வதால், ரமலான் நோன்பு மாதம் முழுதும், பெரும்பாலான ஹோட்டல் மற்றும் தேநீர் விடுதிகளில், காலை முதல் மாலை வரை விற்பனையின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. அதே வேளையில் இந்த உணவு விடுதிகளில் மட்டுமல்லாது நோன்புக்காக ஸ்பெஷலாக கீழக்கரை நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் பல புதிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற ஸ்பெஷல் கடைகளில், மாலை 4 மணி முதலே,  களை கட்டத் துவங்கும் விற்பனை நோன்பு திறக்கும் நேரமான மாலை 6.30 மணி வரை தொடர்கிறது. இதனால் நோன்பாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கு விற்கப்படும், கறி சமோசா, சிக்கன் ரோல், மட்டன் ரோல், வெஜிடேபிள் கட்லெட், சிக்கன் கட்லெட், மிளகாய் பஜ்ஜி, பருப்பு வடை, உளுந்து வடை போன்ற உணவு பதார்த்தங்களின் விற்பனை விறு விறுப்பாக நடை பெறுகிறது.

இதனை நோன்பாளிகள் விரும்பி, தங்கள் இல்லங்களுக்கு வாங்கி செல்கின்றனர். இது போன்ற புதிய கடைகளின் வரவால், நோன்பு பிடித்து களைப்புடன் வீடுகளில் இருக்கும், பெண்மணிகளின் வேலைப் பளு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

கீழக்கரை ரமலான் ஸ்பெசல் பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)



கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)


<<<<<  கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 

Wednesday 17 July 2013

கீழக்கரை நகரின் முதன்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 8 அம்ச கோரிக்கை மனு - கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் கமிஷனரை சந்தித்து வழங்கினர் !

கீழக்கரை நகரில், இன்னும் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகளை களையும் நல்ல நோக்கோடு, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகிகள், நேற்று (16. 07.2013) கீழக்கரை நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள கமிஷனர் அய்யூப் கான் அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கோரிக்கை மனுவும் அளித்தனர். 




அந்த மனுவில், கீழக்கரை நகரின் சுகாதார சீர்கேட்டை சீர் படுத்துவது, சாலைகளில் கொட்டப்படும் கட்டுமானப் பொருள்களை அகற்ற ஆவன செய்வது, தகுதியான ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகள் வழங்குவது, கடற்கரை ஓரங்களில் மீண்டும் கொட்டப்படும் குப்பைகளை தடுத்து நிறுத்துவது, சாலை இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்ப்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.






இந்த சந்திப்பில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாஹீம் (ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு), செயலாளர் பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், உறுப்பினர்கள் விஜயன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு,  நகரின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டுகோள் விடுத்தனர். இந்த கலந்துரையாடலின் போது சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி உடனிருந்தார்.

கீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்புதமாய் காட்சி தரும் 'அம்பலார் வீடுகள்' ! (பகுதி - 1)

எழில் கொஞ்சும் கடற்கரை நகரமான கீழக்கரை நகரம், தொன்மையான சரித்திரப் பதிவுகளையும், புரதான வரலாற்று சின்னங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளிலும், இன்னும் காலத்தால் அழியாத, கலை நயத்துடன் மிளிரும் பழமையான வீடுகளும், வியாபாரத் தளங்களும் காணக் கிடைக்கிறது.





அவற்றுள் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், 150 வருட பழமையான அம்பலார் வீடுகள், அழகிய தேக்கு மர வேலைப்பாடுகளுடன், பார்ப்போரின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி தருகிறது.

இந்த அம்பலார் வீடு, கீழக்கரை அலி பாட்சா மாமா அவர்களின் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையில் வாழ்ந்த அம்பலம் பாரம்பரியத்தில் வந்த அம்பலார்கள் 'ஊர் நாட்டமை' எனும் மதிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். கீழக்கரை முன்னவர்கள் அமபலார்களுக்கு, மிகுந்த மதிப்பும், மரியாதையும் வழங்கி வந்துள்ளார்கள்.

கீழக்கரையில் இன்றும் பெரிய அம்பலம் தெரு, மதார் அம்பலம் தெரு, சின்ன அம்பலம் தெரு எனும் பெயரில் தெருக்கள் காணப்படுகின்றன. கீழக்கரை தச்சர் தெருவில் காண்போரை சுண்டி இழுக்கும் இந்த அம்பலார் வீட்டினை, கி.பி.1880 ஆம் ஆண்டு வாக்கில், பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த, தனவாய் மறைக்கா என்கிற அஹமது சுல்தான் அவர்கள் நிர்மாணித்து இருக்கிறார். பின்னாளில் 1945 ஆம் ஆண்டுகளில் ஆனா. சீனா. சேகு மதார் அம்பலம் அவர்கள் இந்த வீட்டினை புனரமைப்பு செய்து இருக்கிறார். 

பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம்    தொடரும் >>>>>>


FACE BOOK COMMENTS :

  • Asan Hakkim புது "செய்திகளில்" புகுந்து விளையாடுவதோடு மட்டும்மல்லாமல்,பழமை "செய்திகளிலும்" பாய்ந்து சீரும் புலியைப்போல சுறுசுறுப்பான முறையில் தெளிவான தகவல்களை தரும் இளையவனுக்கு!! நன்றி.... அருமை... அருமை.... அதனையும் பழமையின் புதுமை -அன்புள்ள அசன் ஹக்கீம்%%
    2 hours ago · Edited · Like · 1
  • Jameel Mohamed என்ன பார்த்து பார்த்து சொசுகுசாக வீடு கட்டினாலும், இந்த பழங்காலத்து வீட்டின் அழகு தனியே!
    2 hours ago · Like · 2
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' ஆஹா.. அருமையான பதிவு. இப்படி எல்லாம், அழகிய தேக்கு மர வேலைப்பாடுகளுடன் கூடிய வீடுகள் இன்னும் னது ஊரில் இருக்கிறதா ? என திகைப்பூட்டுகிறது. பழைமையை திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான கீழை இளையவனின் பதிவுகள் வரவேற்கத்தக்கது.
    • Seeni Ismath Machan superb, well try..
    • Jaffar Nainaநமதுஊரின்சிறப்பைமற்றவர்கள்தெரிந்துகொள்ளசெய்யும்சிறந்தபணிக்குவாழ்த்துக்கள்நம்மவர்களும்தெரிந்துகொள்கிறரர்கள்
      July 17 at 3:15pm via mobile · Like · 2
    • Lks Meeran Mohideen அருமையான பதிவு...தொடரட்டும் இவை போன்ற வரலாற்று சேகரிப்புகள்.....
    • சின்னக்கடை நண்பர்கள் All Photographs are excellent machaan. keep rocking Keelai ilaiyyavan...
    • Keelakarai Ali Batcha என் மனைவிக்கு நமதூர் வழக்கப்படி சீதனமாக கிடைத்து நாங்கள் வாழும் இல்லத்தைப் பற்றி சர்வ தேச அளவில் வியாபித்து ஜீவித்து வரும் அனைத்து கீழக்கரை மக்களும் மற்றும் உள்ளூர், வெளியூர் கீழக்கரை வாசிகளும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பு பதிவு கீழை இளைவயவன் வளைத் தளத்தில் கொண்டு வந்தமைக்கு உளமார்ந்த இனிய நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

      அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களே மூக்கில் விரல் வைத்து, இது நாம் குடி இருக்கும் வீடு தானா என ஆச்சரியப்படும் படும் வண்ணம் அருமையான படப்பிடிப்பு. கை தேர்ந்த தொழில் முறை புகைப்பட கலைஞர்களையும் மிஞ்சும் விதமாக உள்ளது.மாஷா அல்லா. இதை பாராட்ட வார்த்தைகளை தேடியதில் எதை தேர்ந்தெடுப்பது எதை விடுவது என பெரும் திண்டாட்டமாகி இருக்கிறது. 

      இப்போது நோன்பு காலமாக இருப்பதால்,பின்னொரு நாளில் சீலாமீன் கருவாட்டு ஆணத்துடன் மஞ்சச் சோறு, மாசிக்கறி,நெத்திலி க்ருவாடு வறுவல், முருங்கக்கீரை கூட்டுடன் அவித்து பொரித்த முட்டையுடன் பனை ஓலைப் பட்டையில் உணவு வழங்க நாடி உள்ளேன். இன்ஷ அல்லா.
    • Keelai Ilayyavan மிக்க நன்றி அலி பாட்சா மாமா, இறைவன் நாடினால், தாங்கள் தரவிருக்கும் அன்பின் விருந்தில் பங்கு கொள்ள மிகுந்த ஆவாலாய் இருக்கிறேன். அதே நேரம், அந்த விருந்தில் கீழக்கரையின் வரலாறு ஆய்வாளர். நண்பர் அபு சாலிஹ் அவர்களும் பங்கு கொள்வது தான் ஏற்புடையதாக இருக்கும் என்பது இந்த இளையவனின் சிறிய விண்ணப்பம். 

      ஏனெனில் நான், தங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த நாளை நினைவு கூர்கிறேன். அன்றைய தினம், வரலாறு ஆய்வாளர். நண்பர் அபு சாலிஹ் அவர்கள், நம்மோடு அம்பலத்தார்களின் சரித்திரங்களை கதைத்தவாறு, புகைப்படங்களை பலவாறு எடுப்பதற்கு எவ்வாறெல்லாம் பேருதவி புரிந்தார்கள் என்பதை நாமறிவோம். 

      கீழக்கரை நகரில் எத்தனையோ அற்புதமான கலை நயமிக்க கட்டிடங்கள் எல்லாம், சிதைவுற்று உருத் தெரியாமல் போய் விட்டது. மேலும் தங்களிடம் என்னுடைய பேராவல் எல்லாம், இது போன்ற கலை நயம் மிக்க பொக்கிசங்களை, இன்னும் பல நூறு ஆண்டுகள், அதன் வடிவம் மாறாமல், எதிர் கால தலைமுறையினருக்கு தர, முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    • Keelakarai Ali Batcha அப்படியே ஆகட்டும் தம்பி கீனாஇனா